ஐக்கிய தேசியக் கட்சியின் சதி முயற்சியிலிருந்து சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டிய தருணம் வந்துள்ளது :மஹிந்த ராஜபக்ஷ
எனது காலத்தில் நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னணி கடசியாக மாற்றியமை குறித்து பெருமையடைகின்றேன்.எனது ஆட்சிக் காலத்தின் சுதந்திர கட்சியின் சக்தியை அளவிட்டு பார்க்கின்ற போது அக்கட்சியிலிருப்பவர்கள் விலகிச் சென்றால் மட்டுமே வீழ்த்த முடியும் என்ற மட்டத்தில் இருந்தது. அவ்வாறு விலகிச் சென்ற சிலரின் ஒத்துழைப்பு கிடைத்திருக்காவிட்டால் என்னால் வலுப்படுத்தப்பட்ட சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியினால் வீழ்த்தியிருக்க முடியாது.
எனது ஆட்சி கவிழ்க்கப்பட்டாலும் சுதந்திரக் கட்சி தலைவரை ஜனாதிபதியாக அமர்த்தும் அளவிற்கு சுதந்திர கட்சியை வலுப்படுத்தியுள்ளேன். அமைச்சரவை பொறுப்புக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் பங்கிட்டுக் கொண்டுள்ளன.ஆனால் தீர்மானங்கள் அனைத்தையும் ஐக்கிய தேசிய கட்சியே மேற்கொள்வதால் சுதந்திரக் கட்சி ஐ.தே.க.வின் சிறைக்கைதியாகியுள்ளது. ஐ.தே.க.வின் தீர்மானங்களுக்கு எமது கட்சி உறுப்பினர்களும் கையுயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை எண்ணி வருந்துகின்றேன்.
சுதந்திர கட்சி பெற்றுக்கொடுத்த யுத்த வெற்றியின் பங்காளர்களை பழிவாங்கவே ஐக்கிய தேசியக் கட்சி முனைகிறது. அதேபோல் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இருக்கின்ற ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கும் தரப்பினரை போலி குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணைகளுக்கு அழைத்துச் சென்று அல்லல்படுத்தும் போதும் அரசாங்க தரப்பில் உள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மௌனித்திருக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் இது சுதந்திரக் கட்சியை வீழ்த்த ஐக்கிய தேசிய கடசி முன்னெடுக்கும் சதி முயற்சி என்பது தெளிவாகின்றது. அதனால் தம்மை முடக்கும் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியமா அல்லது தம்மை பாராளுமன்ற உறுப்பினர்களாக்கிய சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் முக்கியமா என தேசிய அரசாங்கத்தில் இணைந்துள்ள சுதந்திரக் கட்சியினர் தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர கட்சியையும் கட்சியின் கொள்கைகளையும் பாதுகாப்பார் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளமை வருந்தக் கூடிய விடயமாகும்.
என்று முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply