இந்தியாவிற்குள் சுதந்திரம் வேண்டும், வெளியே அல்ல: சிறையில் இருந்து விடுதலை ஆனா கண்ணையா குமார் பேச்சு
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமாருக்கு 6 மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கி, டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஐகோர்ட்டு உத்தரவுப்படி, ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீன் பத்திரத்தையும், அதே தொகைக்கான மற்றொருவரின் உத்தரவாதத்தையும் தற்காலிக மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கண்ணையா குமார் நேற்று தாக்கல் செய்தார். அதை ஏற்று, அவரை டெல்லி திகார் ஜெயிலில் இருந்து விடுதலை செய்ய மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, கண்ணையா குமார், நேற்று மாலை ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார். ஜெயிலில் வாசலில் காத்திருந்த நேரு பல்கலைக்கழக ஆசிரியர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். நேரு பல்கலைக்கழக வளாகத்திலும் கொண்டாட்டம் நடைபெற்றது.
சிறையில் இருந்து விடுதலை ஆனதை அடுத்து 3 வாரங்களுக்கு பிறகு ஜே.என்.யு பல்கலைக்கழக வளாத்திற்குள் வந்த கண்ணையா குமார் அங்கு மாணவர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது ’இந்தியாவிற்கு உள் தான் சுதந்திரம் வேண்டும், வெளியே அல்ல’ என்று கூறிய அவர் தன் மீது சுமத்தப்பட்ட தேச விரோத குற்றச்சாட்டை கடுமையாக சாடினார்.
மேலும் அவர் பேசுகையில்;-
ஏபிவிபி அமைப்பினர் மீது எந்தவொரு வெறுப்பும் எனக்கு இல்லை. ஏனெனில் நாம் ஜனநாயகவாதிகள். அவர்களை நாம் எதிர் தரப்பினராகவே பார்க்கிறோம்.
உண்மையில் நாம் ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஏபிவிபி-ஐ எதிரியாக பார்க்க மாட்டோம்.
எனக்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் சத்தியமேவ ஜெயதே என்று கூறிய அவரது வார்த்தைகளை நான் ஏற்கிறேன். ஏனெனில் அந்த வார்த்தைகள் நமது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது.
இந்தியாவின் நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு சட்டம் மீது தமது நம்பிக்கை உள்ளது. தனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply