கட்டுநாயக்க விமான ஓடுபாதையை செப்பனிட நடவடிக்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடுபாதையை செப்பனிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடுபாதை 1986 ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை செப்பனிடப்படவில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.விமான ஓடுபாதையினை செப்பனிடுவதற்கு சுமார் 100 மில்லியன் டொலர்கள் செலவாகும் என அவர் குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ரேடர் கட்டமைப்பினையும் புதுப்பிக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக் அபேசிங்க சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply