ஏமனில் அன்னை தெரசா தொண்டு இல்லத்தின்மீது நடந்த தாக்குதலில் ஒரு இந்திய நர்ஸ் மட்டுமே உயிரிழந்தார்
ஏமன் நாட்டின் கடற்கரை நகரமான ஏடனின் அருகேயுள்ள ஷேக் உஸ்மான் மாவட்டத்தில் அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனமான ‘மிஷனரிஸ் ஆப் சார்ட்டி’ என்ற அமைப்புக்கு சொந்தமான முதியோர் காப்பகம் இயங்கி வருகிறது.இந்த காப்பகத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள் உள்ளே இருந்த நான்கு கன்னியாஸ்திரிகள் உள்பட 16 பேரைப் பிடித்து, கைவிலங்கிட்டு, வரிசையாக நிற்கவைத்து, துடிதுடிக்க சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு கன்னியாஸ்திரிகள் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் முன்னர் தெரிவித்திருந்தார்.
ஆனால், இச்சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஏமன் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த செசிலியா மின்ஸ் என்ற ஒரேயொரு கன்னியாஸ்திரி மட்டும்தான் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின்போது அங்கிருந்த குளிர்பதனப் பெட்டிக்குள் (பிரிட்ஜ்) ஒளிந்துகொண்ட ஒரு கன்னியாஸ்திரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply