அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தமிழர் நியமனமா? பின்னணியை உளவுத்துறை ஆராய்கிறது

3337f9c7-bad8-49fd-8c75-20fd1f5692bb_S_secvpf(1)மெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆன்டனின் ஸ்கேலியா, கடந்த மாதம் திடீரென மரணம் அடைந்தார். இதனால் ஏற்பட்டுள்ள காலி 3337f9c7-bad8-49fd-8c75-20fd1f5692bb_S_secvpf(2)இடத்துக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பரிசீலனை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்தநிலையில், தற்போது இந்த நியமனத்தில் 3 பேரின் பெயர்களை தேர்வு செய்து, அவர் இறுதிக்கட்ட பரிசீலனை செய்து கொண்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த மூவர் பட்டியலில் தமிழரான ஸ்ரீகாந்த் சீனிவாசன் (வயது 48), அமெரிக்காவின் மெர்ரிக் கார்லண்ட் (63), கேட்டன்ஜி பிரவுன் ஜாக்சன் (45) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் மெர்ரிக் கார்லண்ட், ஸ்ரீகாந்த் சீனிவாசன் ஆகிய இருவரும் குடியரசு கட்சியினராலும் விரும்பப்படுகிறவர்கள் என்பதால் இவர்களுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

 

இவர்கள் இருவரது பின்னணி பற்றியும் ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் பணியில் உளவுத்துறை (எப்.பி.ஐ.) ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 

சீனிவாசனின் தாய் சென்னையை சேர்ந்தவர் என்பதும், தந்தை திருநெல்வேலியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply