எக்நெலிகொட குறித்த ஒலி நாடா ஊடகங்களுக்கு எவ்வாறு கசிந்தது என்பது குறித்து கேள்வி
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட குறித்த ஒலி நாடா ஒன்று ஊடகங்களுக்கு எவ்வாறு கசிந்தது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இராணுவத் தரப்பிலிருந்து இந்த ஒலி நாடா கசிய விடப்பட்டதாக குற்றம் சுமத்தபபட்டுள்ளது. எக்நெலிகொட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உரையாடியமை தொடர்பிலான ஒலி நாடா ஒன்றே இவ்வாறு சில இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
எக்நெலிகொட புலிகளுடன் தொடர்பு பேணியதாகவும் அதற்கான ஆதாரம் அடங்கிய ஒலி நாடாவை இராணுவத்தினர் ஹோமாகம நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர். இந்த ஒலி நாடா நீதிமன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஒலி நாடா விபரங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒலி நாடா தகவல்களை இராணுவத்தினர் ஊடகங்களுக்கு வழங்கியிருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதனால் இது குறித்து கருத்து வெளியிட முடியாது என இராணுவப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, சந்தியா எக்நெலிகொட ஓர் புலி ஆதரவாளர் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சீ.சீ.ரீ.வி கமரா ஊடாக ஒட்டியவர்களை இலகுவில் கண்டு பிடிக்க முடிந்த போதிலும், இந்த சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் யார் என்பதனை கண்டு பிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply