மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து

maithiriமானிடர்கள் மேற்கொள்ளும் ஆன்மீக சமய சாரங்கள் மற்றும் அனுஷ்டானங்களின் ஊடாக முழு பிரபஞ்சத்தினதும் ranilநன்மை நன்னெறிகள் மீதான அவர்களின் எல்லையற்ற பக்தி வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்களிலுமுள்ள இலட்சக்கணக்கான இந்து பக்தர்கள் தங்களின் ஆன்மீக நல்லொழுங்களை வளர்த்துக் கொள்ளவும் லௌகீக வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளவும் அனுஷ்டிக்கின்ற மஹா சிவராத்திரி அவர்களின் நன்மைகள் மீதான உயர்ந்த ஈடுபாட்டைக் காட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நன்னாளில் இந்து பக்தர்கள் அமைதியையும் மன ஆறுதலையும் எதிர்ப்பதுடன் தொடரந்தும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் இத்தகைய பாராம்பரியங்கள் அமைதியானதும் சமாதானமானதுமான வாழ்க்கைக்கு வழி வகுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

மஹா சிவாரத்திரி தினத்தை அதன் உண்மையான அர்த்தத்துடன் கொண்டாடும் அனைத்து பக்தர்களுக்கும் ஜனாதிபதி தமது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் மனித நேயத்தை கட்டியெழுப்பவும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்குமான ஒரு சநதரப்பமாக மஹா சிவராத்திரி தினத்தை ஆக்கிக் கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியிலுள்ள இந்து பக்தர்கள் மாசி மாதம் அமாவாசை தினத்தன்று உதயமாகும் மஹா சிவார்த்திரி தினம் சிவ பெருமானின் விருப்பத்துக்குரிய தினமாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிவராத்திரியை அர்த்தமிக்கதாய் அனுஷ்டிப்பதன் ஊடாக விடுதலைக்கான வழியை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்

அத்துடன் சுதந்திரம்,நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை அடைந்து கொள்வதற்கு பாரிய அர்ப்பணிப்பு பொறுமை துணிச்சல் மற்றும் மானிட அன்பு அவசியம் என்பதில் சந்தேகமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன மத பேதங்களை விதைத்து நாட்டை இருளில் தள்ளுவதற்கு பல்வேறு சக்திகள் செயற்பட்டு கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மனித நேயத்தை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளவதற்கும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கான ஒரு சந்தரப்பமாக மஹா சிவராத்திரியை மாற்றிக் கொள்ள வேண்டுமென பிரதமர் கோரியுள்ளார்.

அனைத்து இந்து மக்களுக்கும் அர்த்தபூர்வமான மஹா சிவார்த்திரியாக இன்றைய தினம் அமைய தாம் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply