ஐ.எஸ். தீவிரவாதிகளை சித்திரவதை செய்ய அனுமதிப்பேன்: டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப், இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களை அடித்து விரட்டுவேன் என பேசி வருகிறார்.இந்நிலையில் நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த டொனால்ட் டிரம்ப் “அவர்கள்(திவிரவாதிகள்) எப்படி விளையாடுகிறார்களோ அப்படிதான் நாமும் விளையாட வேண்டும். அவர்கள் எந்த விதியையும் பின்பற்றாத போது நாம் மட்டும் மென்மையான சட்டங்களை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.
நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஐ.எஸ். தீவிரவாதிகளை கடுமையான முறையில் விசாரணை செய்ய அனுமதிக்கும் வகையில் சட்டங்களை மாற்றி அமைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவில் முகத்தை துணியால் மூடி தண்ணீர் ஊற்றுவது உட்பட சித்திரவதை செய்து விசாரிக்கும் முறைகளுக்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply