ஈழத்தமிழர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது : வைகோ

vaikoம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகம் உச்சப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், வருவாய் ஆய்வாளரின் மிரட்டலால் ரவீந்திரன் என்ற ஈழத்தமிழர் அலைபேசிக் கோபுரத்தில் ஏறிக்குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றது.

தமிழக அரசு வருவாய் அதிகாரி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரவீந்திரனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளித்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈழத்தமிழர் ரவீந்திரன் மரணத்திற்கு காரணமான வருவாய்த்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவீந்திரனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியும் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply