158 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பு :டி.எம்.சுவாமிநாதன்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 158 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிட்டுள்ளார்,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். நாடாளுமன்றத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்குப் பதிலளித்து உரையாற்றிய போதே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இந்த தகவலை வெளியிட்டார்.
“பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறிய குற்றங்களை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஒரு மாத சிறைத்தண்டனையும், ஒரு ஆண்டு புனர்வாழ்வும் அளிப்பதென முன்னர் இணக்கம் காணப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சட்டமாஅதிபர், பிரதமர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்திலேயே இதற்கு இணக்கம் காணப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply