விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றிய 150 கிலோ தங்கம் எங்கே?: ரனில் விக்ரமசிங்கே கேள்வி

ranilவிடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றிய 150 கிலோ தங்கம் எங்கே? என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கேள்வி விடுத்தார்.இலங்கை பாராளுமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இதில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பேசினார். அப்போது கடந்த 2009–ம் ஆண்டு ராஜபக்சே ஆட்சி காலத்தில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அப்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து 3 லட்சம் தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களிடம் இருந்து ராணுவம் 150 கிலோ தங்கம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தது.

அவற்றில் 30 கிலோ தங்கம் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் மதிப்பு 13 கோடியே 10 லட்சமாகும். இவை தவிர 80 கிலோ தங்கம் ராணுவத்தின் வசம் உள்ளது.

மீதமுள்ள 40 கிலோ தங்கம் என்ன ஆனது? அது எங்கே போனது. திருடப்பட்டு விட்டது. எனவே அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு விக்ரமசிங்கே பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply