அடுத்த தலைமுறைக்கான மார்க்-3 ராக்கெட் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்

srikotta-cd35-4dee-a0ea-eaf6de92dae2_S_secvpfஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று ராக்கெட் ஏவப்பட்ட பிறகு விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார், பேசியதாவது:- இஸ்ரோவின் சாதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது பி.எஸ்.எல்.வி. சி௩2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையில் 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வகையில் 6 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரே ஒரு செயற்கைக்கோள் அடுத்த மாதம் ஏவப்பட உள்ளது.

 

அடுத்த 1½ மாதத்தில் இந்த 7 செயற்கைக்கோள்களின் பயன்பாட்டை நாம் முழமையாக பெறமுடியும். இந்த திட்டம் வெற்றி பெறுவதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா ஒரு மைல்கல்லை தொடுவது ஒரு வரலாற்று சாதனை ஆகும்.

 

நம் நாட்டில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறும் தூரம் வெகுதொலைவில் இல்லை என்ற நிலை உள்ளது. அதிக எடை கொண்ட அடுத்த தலைமுறைக்கான மார்க்௩ ராக்கெட்டில் 2-வது கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 3-வது கட்ட சோதனை விரைவில் நடக்க உள்ளது. இந்த ஆண்டு இறுதியிலேயே மார்க்௩ ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

இதில் விஞ்ஞானிகள் பி.ஜெயக்குமார், சோம்நாத், சிவன், குன்னில் கிருஷ்ணன், மயில்சாமி அண்ணாதுரை, தாபன் மிஸ்ரா, ஆர்.குட்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply