பெல்ஜியம் நாட்டுக்குள் ஊடுருவ முயற்சி: லாரியின் ரகசிய அறையில் இருந்த 25 சீக்கியர்கள் கைது
இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளில் சட்ட விரோதமாக ஊடுருவி குடியேறுவது வழக்கமாக உள்ளது.இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டில் ஊடுருவ முயன்ற 25 சீக்கியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அருகில் உள்ள ருமேனியா நாட்டில் இருந்து பெல்ஜியத்துக்கு வெங்காயம் ஏற்றிய கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அதை பெல்ஜியம் போலீசார் சோதனையிட்டனர்.கண்டெய்னரில் பின் பகுதி முழுவதும் வெங்காய மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. ஆனால், உள்பகுதியில் ரகசிய அறை ஒன்று இருந்தது. அதற்குள் 25 பேர் அமர்ந்து இருந்தனர். அவர்களில் 2 வயது குழந்தைகளில் இருந்து 88 வயது முதியவர் வரை இருந்தனர். அவர்கள் அனைவரும் சீக்கியர்கள் என்பது தெரிய வந்தது.பெல்ஜியத்தில் சட்ட விரோதமாக குடியேற வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களை பற்றிய மற்ற விவரங்களை வெளியிடவில்லை.இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சீக்கிய மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். எனவே, இந்த இரு நாடுகளில் ஏதாவது ஒன்றை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply