பசில் ஸ்ரீ.ல.சு.க. உறுப்புரிமையிலிருந்து நீங்கியவர் : தேசிய அமைப்பாளர்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நீங்கிக் கொண்டவராக கருதப்படுகின்றார் என அக்கட்சியின் இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ரவி கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தயவில், அமைச்சராகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.2005 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த இவர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 10 ரூபா பணத்தை கட்சியின் உறுப்புரிமைக்காக செலுத்தியதில்லை. இதனால், இவர் உறுப்புரிமையை இலக்கின்றார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் வருடாந்தம் தமது உறுப்புரிமையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இருந்தும், பசில் ராஜபக்ஷ இதனை ஒருபோதும் செய்ததில்லை.
இதுபோன்ற ஒருவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிரித்து, புதிய கட்சியொன்றை உருவாக்க முயற்சிப்பது, புதுமையான ஒன்று அல்ல எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply