வடகொரியாவின் நீர் மூழ்கி கப்பல் திடீர் மாயம்: மூழ்கி விட்டதா?

kereaஅமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் தொடர்ந்து மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிற வடகொரியாவின் நீர் மூழ்கிக்கப்பல் ஒன்று திடீரென மாயமாகி விட்டது. வடகொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் இயங்கி கொண்டிருந்த அந்த கப்பல் என்ன ஆனது என தெரியவில்லை. அது திக்குதெரியாமல் எங்காவது போய்விட்டதா அல்லது மூழ்கி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வடகொரிய நீர் மூழ்கி கப்பல் காணாமல் போய்விட்டதாக வெளியான தகவல் பற்றி தென்கொரியா விசாரித்து

 

கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 

அதே நேரத்தில் இந்த கப்பல் மாயமானது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. மாயமான கப்பலை

 

வடகொரியாவின் கடற்படை தேடி வருவதை அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள், விமானம், கப்பல் கண்காணித்து

 

வருவதாகவும் அந்த தகவல்கள் மேலும் சொல்கின்றன.

 

இருப்பினும் அந்த நீர் மூழ்கி கப்பல் மூழ்கி இருக்கத்தான் வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்காவின் ‘யுஎஸ் நேவல்

 

இன்ஸ்டிடியூட்’ கூறுகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply