மின்சார சபை தலைவர் இராஜினாமா
நாடளாவிய ரீதியில் மின்விநியோகம் தடைப்பட்டமையால், மின்விநியோகம் வழமைக்கு திரும்பியதும் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் ஏ. விஜயபால அறிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில் ஆறுமாதங்களில் இதுவரை மூன்று தடவைகள் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பாரிய மின்துண்டிப்பு ஏற்பட்டதனை அடுத்து இலங்கை மின்சார சபையின் தலைவர் அநுர விஜயபால தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
இதன்படி இன்றைய தினம் அதற்கான இராஜினாமா கடிதத்தை அமைச்சரிடம் கையளிக்கவுள்ளார். மின் பொறியியல் துறையில் 20 வருட அனுபவத்தை பெற்ற இவர் , 2011 ஆம் ஆண்டு மின்சார சபையின் உபதலைவர் பதவியிலிருந்தமை குறிப்பிடதக்கது.
நாடு பூராகவும் ஆறு மாதங்களில் இதுவரை மூன்று தடவைகள் மின்விநியோகம் துண்டிப்பு குறித்து இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய சந்திக்கவுள்ளார்.
மேலும் இன்று காலை 10 மணிக்கு அமைச்சில் விசேட சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது. தொடர் மின் துண்டிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply