கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 21ஆம் திகதி வரை தடுப்புக்காவலில்
ஸ்ரீலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 23 மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இ. கயஸ்பெல்டோனோ உத்தரவிட்டுள்ளார்.அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இவர்கள் சிறிய மீன்பிடி படகுகளில் அத்துமீறி மன்னார், தாழ்வுபாடு பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டனர்.
இதேவேளை, நெடுந்தீவை அண்மித்த கடற்பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மேலும் ஐந்து மீனவர்களையும் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply