பெர்லின் நகரில் காரில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி

berlinபெர்லினில் காரில் இருந்த வெடிபொருள் வெடித்ததில், ஒட்டுனர் பலியானார் என ஜெர்மன் காவல்துறை தெரிவித்திருக்கிறது.மேற்கு மாவட்டமான சர்லட்டன்பர்கில் நகர மையத்தை நோக்கி இந்தக் கார் சென்றுகொண்டிருந்தபோது, இந்த வெடிப்பு ஏற்பட்டது. கார் தூக்கியெறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அந்தக் காரில் வேறு ஏதும் வெடிபொருட்கள் இருக்கிறதா என அதிகாரிகள் சோதித்துவருகின்றனர். விசாரணைகள் முதற்கட்டத்தில் இருப்பதால், இதற்கான காரணம் குறித்து ஏதும் சொல்ல முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply