என்ஜினீயரிங் மாணவர்கள் தொடர் தற்கொலை: போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யிடம் மாணவர் கூட்டமைப்பு மனு

suzeidஎன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கவுதமன் நேற்று காலை சென்னை போலீஸ் டி.ஜி.பி. (சட்டம் – ஒழுங்கு) திரிபாதியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், ‘‘கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் படித்துவந்த மாணவர்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதற்கு கல்லூரி நிர்வாகம் தான் காரணம். எனவே, அந்தந்த கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை அளித்துவிட்டு வெளியே வந்த கவுதமன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘எனது புகார் மனு மீது 10 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி கூறியுள்ளார்.

நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும், பிற மாணவர் அமைப்புகளும் சேர்ந்து தேர்தலை புறக்கணிப்போம்’’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply