தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்!

pottuதமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகலிங்கம் சிவசங்கர், உயிருடன் இருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வன்னிப் போரின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் இந்தியாவின் தமிழகத்தில் மறைந்து வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.“குருடீ” என்ற பெயரில் தமிழகத்தில் பொட்டு அம்மான் மனைவியுடன் மறைந்து வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நந்திக்கடல் போரின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் அறிவித்த போதிலும் அவரது சடலம் மீட்கப்படவில்லை. பொட்டு அம்மான் உயிரிழந்துள்ளார் என்பது பற்றிய உறுதியான சாட்சியங்களை கடந்த அரசாங்கம் இந்தியாவிற்கு வழங்கவில்லை என குறித்த சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, பொட்டு அம்மான் இறுதிப் போரில் கொல்லப்பட்டதாக 2014ம் ஆண்டில் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொட்டு அம்மான் கொல்லப்பட்டார் எனவும், சடலத்தை மீட்கவில்லை எனவும் 2009ம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். 2009ம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிப் போரில் பொட்டு அம்மான் உயிரிழந்தார் என படையினர் தெரிவித்திருந்தனர்.

எனினும் அவரது சடலம் மீட்கப்படவில்லை. இந்திய செய்தியை வெளியிட்ட சிங்கள ஊடகம் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பொட்டு அம்மான் கொல்லப்பட்தாக செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், தற்போது பொட்டு அம்மான் இந்தியாவின் தமிழகத்தில் மனைவியுடன் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply