அமெரிக்க அதிபர் தேர்தல்: வேட்பாளர் போட்டியில் இருந்து மேலும் ஒரு வேட்பாளர் விலகினார்
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்க முயற்சித்துவரும் ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டவர்கள் தங்கள் கட்சியினரிடையே ஆதரவு திரட்டி வருகின்றனர்.இந்நிலையில், குடியரசுக் கட்சியின் சார்பில் ஆதரவு திரட்டி வருபவர்களில் ஒருவரான பென் கார்சனின் பிரசாரத்துக்கு பல மாநிலங்களில் போதிய வரவேற்பு கிடைக்காததால் கடந்த ஐந்தாம் தேதி போட்டியில் இருந்து அவர் விலகிக் கொண்டார்.
அதிபர் பதவிக்கான கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக ஒருவரை அறிவிக்க வேண்டுமானால் மொத்தமுள்ள அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களான 2,472 பேரில் சரிபாதியான 1,237 பேர் அவரை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.
இந்த நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) புளோரிடா மாநிலத்தில் நடைபெற்ற ‘சூப்பர் டியூஸ்டே’ பிரசாரத்தின்போது 45.5 சதவீதம் குடியரசுக் கட்சி பொறுப்பாளர்களின் ஆதரவை பெற்ற டொனால்ட் டிராம்ப், அக்கட்சி வேட்பாளர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
புளோரிடா மாநில செனட்டரும், குடியரசுக் கட்சியின் மற்றொரு வேட்பாளருமான மார்கோ ருபியோ வெறும் 27.1 சதவீதம் வாக்குகளை பெற்று பின்தங்கி இருந்தார். ஏற்கனவே, மின்னெஸொட்டா, பிய்ர்டீ ரிக்கோ மற்றும் வாஷிங்டனில் நடைபெற்ற பிரசார கூட்டங்களின்போது 163 பொறுப்பாளர்கள் இவரை ஆதரித்திருந்தனர்.
ஆனால், அதிபர் பதவிக்கான கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராவதற்கு தேவையான ஆதரவு கிடைக்காததால் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக மார்கோ ருபியோ அறிவித்துள்ளார்.
‘நான் அமெரிக்காவின் அதிபராக வருவது கடவுளுக்கு சித்தமாக இல்லை என்று தோன்றுகிறது’ என்ற வருத்தத்தோடு தனது விலகல் அறிவிப்பை நேற்று வெளியிட்ட மார்கோ ருபியோவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தெற்கு கரோலினா மாநில கவர்னர் நிக்கி ஹாலே, லூசியானா மாநில முன்னாள் கவர்னர் பாபி ஜின்டால் உள்பட பலர் இந்த பதவிக்கு முன்மொழிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply