மின்சக்தி அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஜனாதிபதி தடை விதிப்பு
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இவ்வாரத்தில் மேற்கொள்ளவிருந்த தனிப்பட்ட ரீதியிலான வெளிநாட்டுப் பயணத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதித்துள்ளார். நாட்டுக்குள் மின்தடைப் பிரச்சினையொன்று உருவாகியுள்ள நிலையில் மின்சக்தி அமைச்சர் வெளிநாடு செல்வது உகந்ததல்ல என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவ்வமைச்சரிடம் கூறியுள்ளார். இதற்கமைய அமைச்சரது வெளிநாட்டுப் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply