என்னை கொலை செய்ய வந்த விடுதலைப் புலி உறுப்பினரை விடுவியுங்கள் : பொன்சேகா
தம்மை இலக்குவைத்த, விடுதலைப் புலிகள் பயங்கரவாதஅமைப்பு நடத்திய தாக்குதலுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தமிழ் கைதியை பொதுமன்னிப்பின் பேரில் விடுவிக்குமாறு, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.தம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை அண்மையில் ஜனாதிபதி விடுவித்தமையானது, நல்லிணக்கத்திற்கான சிறந்த சமிக்ஞை எனக் குறிப்பிட்ட பொன்சேகா, அதன் அடிப்படையில் இந்த தமிழ் கைதியையும் விடுதலை செய்யப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் சரத் பொன்சேகாவை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், சரத் பொன்சேகா படுகாயமடைந்து சில மாதங்களுக்கு பின்னரே கடமைக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply