கட்சியை விட நாட்டு மக்களின் நலனே முக்கியம் ; பைசர் முஸ்தபா

faiserஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவுபடுகின்றமையினாலேயே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக பிரச்சினை காரணமாகவே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிற்போடப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் குறித்த கருத்து தவறானது என தெரிவித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, கட்சியை பாதுகாப்பதை விட நாட்டின் நிலைமை தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்படுவதே அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஜனநாயகத்தை பாதுகாப்பது தொடர்பில் அக்கறை செலுத்தியுள்ளமையினாலேயே உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பினை அரசாங்கம் வெளியிடாத பட்சத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கூட்டு எதிரணி எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply