நாடு கடந்த திபெத்தியர்கள் பாராளுமன்றம் புதிய பிரதமரை தேர்வு செய்ய வாக்குப்பதிவு நடைபெற்றது
உலகம் முழுவதும் உள்ள நாடு கடந்த திபெத்தியர்கள், தங்களுக்கென்று உள்ள பாராளுமன்றத்திற்காக புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.சீனாவில் தொடர்ந்த போராட்டங்களுக்குப் பின் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, உள்நாட்டுப் போருக்குப் பின், 1949ல் நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. தொடர்ந்து 1951ல் திபெத்தையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அதை எதிர்த்து 1959ல், திபெத் தலைநகர் லாசாவில் பெரும் புரட்சி உருவானது. சீன ராணுவம் அதை முறியடித்தது.
இந்த உள்நாட்டு போரின் போது ஏராளமான திபெத்தியர்கள் புலம் பெயர்ந்து சென்றனர். சுமார் 90 ஆயிரம் திபெத்தியர்கள் உலகம் முழுவதும் தற்போது உள்ளனர்.
இவர்களுக்கென்ற மாதிரி பாராளுமன்றம் ஒன்று இந்தியாவின் தர்மசாலா பகுதியில் இயங்கி வருகிறது. கிட்டத்தட்ட இந்திய நாட்டின் பகுதிக்குள் ஒரு தனி அரசாங்கம் போல் இது செயல்பட்டு வருகிறது. இது ஒருவகையில் பயிற்சி என்றே சொல்லப்படுகிறது. தர்மசாலாவில் ஒரு குறிப்பட்ட பகுதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பாராளுமன்றத்திற்காக பிரதமரை தேர்வு செய்வதற்கு வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. கடந்த 2011-ம் ஆண்டு முந்தைய வாக்குப்பதிவு நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெறுகிறது.
மேலும் பாராளுமன்றத்திற்கான 45 உறுப்பினர்களையும் இந்த வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்கின்றனர். திபெத்தின் மதத் தலைவர் தலாய் லாமா இதில் வாக்காளர் கிடையாது.
வாக்குப்பதிவு தர்மசாலை தவிர இந்தியாவில் புதுடெல்லி, டேராடூன், டார்ஜிலிங், பைலகுப்பி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இன்று காலை தொடங்கி வாக்குபதிவு நடைபெற்று வருவதாக நாடு கடந்த திபெத்திய பாராளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவித்தார். மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவுபெறும்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply