தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம் பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்

ANANTHANபழங்கால தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியமாக விளங்கி, பல அரிய தகவல்களை இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு அளித்து உதவிய பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னையில் இன்று மரணம் அடைந்தார்.”பிலிம் நியூஸ்” ஆனந்தன் என்றழைக்கப்படும் ஆனந்தன், தமிழ்த் திரைப்படச் செய்திகளை அதிகம் சேகரித்து வைத்திருக்கும் நபராக திரையுலக வட்டாரங்களில் அறியப்பட்டவராவார்.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரைத்துறையில் வெளியான பல்லாயிரக் கணக்கான திரைப்படங்களைப் பற்றிய புள்ளி விவரங்கள் இவர் விரல்நுணியில் வைத்திருந்தார். ஊமைப் படத்தில் தொடங்கி நாளை வெளியாகப் போகும் படங்கள் வரை வெளியான ஆண்டு, மாதம், தேதி, நடிகர்/நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்…என்று அத்தனை விவரங்களையும் துல்லியமாக ஆவணப்படுத்தி வைத்திருந்ததால் தென்னிந்திய திரையுலகின் ‘நடமாடும் விக்கிபீடியாவாக’ இவர் விளங்கினார்.

திரைப்படத் துறையில் முதன்முதலாக மக்கள் தொடர்புப் பணியில் இருந்த இவரிடம் தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைத்துத் திரைப்படத் துறையினர் குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வரும் இவரிடமிருந்த தமிழ்த்திரைப்பட செய்திக் கோப்புகளையும் ஆவணங்களையும் தொகுத்து நூலாக வெளியிட தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்தது. “சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு” என்ற பெயரில் இந்நூல் வெளியிடப்பட்டது.

1991-ல் தமிழக அரசின் கலைமாமணி விருதுபெற்ற ”பிலிம் நியூஸ்” ஆனந்தன் சென்னையில் இன்று காலமானார். இவரது மகனான ‘டைமண்ட் பாபு’வும் திரையுலகில் மக்கள் தொடர்புப் (PRO) பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply