ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 9.7 இன்ஞ் ஐபாட் புரோ வெளியிடப்பட்டது : முழு தொழில்நுட்ப விபரங்கள்

IPADஇன்று கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் புதிய 9.7 இன்ஞ் ஐபாட் புரோ மற்றும் ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போனை வெளியிட்டது.விழாவை ஆப்பிள் சி.இ.ஓ. டிம் குக் தொடங்கிவைத்து பேசினார். ஆப்பிள் நிறுவனத்திற்கும், அமெரிக்க அரசுக்கும் நடந்துவரும் சட்ட போராட்டங்கள் பற்றி டிம் குக் பேசினார். பின்னர் புதிய 9.7 இன்ஞ் ஐபாட் புரோ வெளியிடப்பட்டது.

ஐபாட் புரோ:

9.7 இன்ஞ் ஐபாட் புரோ 12 மெகா பிக்சல் கேமரா, 4 ஜி.பி ரேம், ஸ்மார்ட் கீ போர்ட், 64-பிட் A9X செயலி, ட்ரு டோன் டீஸ்பிளே, iOS 9.3-ன் நைட் ஷிப்ட் வசதி, நான்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஆப்பில் பென்சில், 5 மெகா பிக்சல் முன்புற கேமரா போன்ற முக்கிய அம்சங்கள் 9.7 இன்ஞ் ஐபாட் புரோவில் அடங்கியுள்ளது.

32 ஜி.பி, 126 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி என மூன்று மாடல்களில் ஐபாட் புரோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் 32 ஜி.பி மாடலின் விலை 599 டாலர் ஆகும். 126 ஜி.பி. மாடல் 749 டாலர் என்றும், 256 ஜி.பி. மாடல் 899 டாலர் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்குறிய மூன்று மாடல்கள் வை-பை வசதி கொண்டவை.

முன்பதிவுகள் மார்ச் 24-ம் தேதி முதல் தொடங்குகிறது. 31-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply