சைபர் தாக்குதல்களுக்கு ஆங்கில மொழியே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன : ஆய்வில் தகவல்
சென்ற ஆண்டில் சைபர் தாக்குதல்கள் எவ்வாறு இருந்தது என ஜப்பானின் பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான டிரெண்ட் மைக்ரோ ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.அதில், ஸ்பாம் மெசேஜ்களை அனுப்ப ஆங்கில மொழியே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, சீன மொழியும் (2.6 சதவீதம்), ஜெர்மன் மொழியும் (1.7 சதவீதம்) சைபர் தாக்குதல்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
ஆன்லைனில் பாதுகாப்பாக உலவுவதற்கு நாம் அவ்வபோது செக்யூரிட்டி மென்பொருட்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டியுள்ளது. சைபர் தாக்குதல்களை தொடுப்பவர்கள் இப்போதெல்லாம் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலக அளவில் சென்ற ஆண்டில் மட்டும் 52 பில்லியன் சைபர் தாக்குதல்களை டிரெண்ட் மைக்ரோ நெட்வொர்க் தடுத்து நிறுத்தியுள்ளது. 2012-ம் ஆண்டில் இருந்து கம்ப்யூட்டர்களை தாக்கும் வைரஸ்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாறாக, தங்களுக்கு தேவைப்படும் தகவல்களை திருடுவதற்கு புதிய ஹாக்கிங் தொழில்நுட்பங்களை ஆராய்ந்து நுணுக்கமாக சைபர் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply