பாகிஸ்தானில் போலி மதுபானம் அருந்திய 24 இந்துக்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் போலி மதுபானம் அருந்திய இந்துக்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். டண்டோ முகமது கான் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 6 பெண்கள் உட்பட 24 இந்துக்கள் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களின் உடல்நிலையும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹோலி பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் டீலர் மூலமாக தரக்குறைவான போலி மதுபானங்களை வாங்கி அருந்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
முறைகேடாக போலி மதுபானங்களை விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் தவறிவிட்டதாக கூறி பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை அடுத்து காவல் நிலைய அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் போலி மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு இதேபோல் பண்டிகை ஒன்றின் போது, போலி மதுபானம் அருந்தி 29 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் முஸ்லீம்கள் மதுபானம் அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் அல்லாதோர் அரசால் விற்பனை செய்யப்படும் தரமான மதுவை அருந்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply