தேர்தலில் வாக்களிக்க சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு விடுமுறை தேவை: டாக்டர் ராமதாஸ் அறிக்கை

ramadasபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வசதியாக அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். ஆனால் இதை ஏற்க முடியாது என்றும், கட்டாய விடுமுறை அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ‘சாப்ட்வேர்’ நிறுவனங்கள் கோரியுள்ளன. இது ஏற்கத்தக்கது அல்ல. ‘சாப்ட்வேர்’ நிறுவனங்களுக்கு விடுமுறை சாத்தியமல்ல என்று கூறி மக்கள் தங்களின் கடமையை நிறைவேற்ற முட்டுக்கட்டை போடக்கூடாது. வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் மிகவும் வித்தியாசமான, முக்கியமான தேர்தல் ஆகும்.

 

‘சாப்ட்வேர்’ நிறுவனங்கள் உள்பட தொடர்ச்சியாக செயல்படவேண்டிய அனைத்து நிறுவனங்களிலும் அத்தியாவசிய பணியாளர் தவிர மற்ற அனைவருக்கும் தேர்தல் நாளில் வாக்களிப்பதற்கு வசதியாக ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதை தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் உறுதி செய்யவேண்டும்.

 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply