முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு விசேட நீதிமன்றம் அறிவித்தல்

kottaபயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு மேல் நீதிமன்றம் முன்னிலையில் சாட்சியமளிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது. விசேட மேல் நீதிமன்றின் ஆணையாளர் ஐராங்கனி பெர்னாண்டோ இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார்.எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி இவ்வாறு மன்றில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு சிறப்பு மேல் நீதிமன்றினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ரஜபக்ஷவை கொலை செய்வதற்காக கொழும்பு,

பித்தல சந்தியில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய குண்டுதாரிக்கு உதவி ஒத்தாசைகளை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஐவருக்கு எதிரான வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியாக சாட்சியமளிக்கவே கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply