இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் குறித்து கண்காணிக்கப்படுகிறது :ஜயநாத் ஜயவீர
உலங்கின் மிகவும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் குறித்து இலங்கையில் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் 24 மணித்தியாலங்களும் கண்காணித்து வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.அண்மையில் பிரஸெல்ஸ் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லையெனவும் பிரஸெல்ஸ் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்கனவே பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply