வடக்கு கிழக்கு மாகாண வீட்டுத் திட்டத்தில் மோசடி அனுரகுமார திஸாநாயக்க குற்றச்சாட்டு
மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சில் இடம்பெறும் பல்வேறு மோசடிகளால் நாட்டிற்கு பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்கட்சியின் பிரதான கொரடாவுமான அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஊடாக 65 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும் என அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக குறித்த திட்டத்திலுள்ள வீடொன்றின் நிர்மாணத்திற்கு 1 தசம் 2 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்ட போதிலும் பின்னர் அந்த பெறுமதி 2 தசம் 1 மில்லியனாக அதிகரிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் ஐந்தரை இலட்சம் ரூபா செலவில் வீடொன்று அமைக்கப்பட்ட போதிலும் தற்போது வீடொன்றுக்கு அதிகம் செலவிடப்படுகின்றமை கேள்விகுரியது அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் வீடொன்று ஆறரை இலட்சம் ரூபாவிற்கே நிர்மாணிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டத்தில் எந்தவொரு மோசடிகளும் இடம்பெறவில்லை என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply