சீனாவில் மேலும் 2 புதிய அணு உலைகளை உருவாக்க ரூ.32 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

CHINAசுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், நிலக்கரியை சார்ந்து இருப்பதை குறைக்கவும் சீனா மேலும் 2 புதிய அணு உலைகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, 4.8 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் 32 ஆயிரம் கோடி) இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்துள்ளது. அணு உலைகளை கட்டுவதற்கான பணிகளை இந்த ஆண்டே துவங்க உள்ளது. தற்போது சீனா மின்சார தேவைக்கு நிலக்கரியையே சார்ந்து இருக்கிறது. கிட்டதட்ட 64 சதவீத மின்சாரம் நிலக்கரியில் இருந்தே அங்கு பெறப்படுகிறது. இது சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள சராசரியை விடவும் அதிகமாகும். அணுசக்தி வாயிலாக மின்சாரத்தை தயாரித்தால் குறைந்த அளவே கார்பன் வெளியாகும். அதேநேரத்தில் அதிக அளவில் மின் உற்பத்தி செய்ய முடியும்.

தற்போது சீனாவில் 30 அணு உலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் இருந்து 28.31 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், 26.72ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் 24 அணு உலைகளை கட்டி வருகிறது.

உலகிலேயே அணு உலைகளில் இருந்து மின்சாரத்தை அதிக அளவில் தயாரிக்கும் நாடுகளில் முதலிடத்தில் சீனா உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு புகுஷிமா பேரழிவுக்கு பின் பாதுகாப்பு கருதி சீனாவில் அணு உலைகள் அமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும், மீண்டும் 2012-ல் அணு உலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் 1100 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகளை சீனா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply