தமிழக சட்டசபை தேர்தல்:பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியீடு

221c5db2-44dc-45dc-985e-d74756572f31_S_secvpfதமிழக சட்டசபைக்கு வருகிற மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர்களின் பட்டியலுடன் அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லி சென்றனர். டெல்லியில் நேற்று பாரதீய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் 54 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

கூட்டம் முடிந்ததும் வேட்பாளர்கள் பட்டியலை மத்திய மந்திரியும் தேர்தல் குழு செயலாளருமான ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

 

யார்-யார்? எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் வருமாறு:-

 

1. கும்மிடிப்பூண்டி- எம்.பாஸ்கர்

 

2. திருத்தணி- எம்.சக்கரவர்த்தி

 

3. ஆவடி- ஜே.லோகநாதன்

 

4. பெரம்பூர்- பிரகாஷ்

 

5. சைதாப்பேட்டை- காளிதாஸ்

 

6. தியாகராயநகர்- எச்.ராஜா

 

7. காஞ்சீபுரம்- டி. வாசன்

 

8. ஆம்பூர்- வெங்கடேசன்

 

9. ஓசூர்- ஜி.பாலகிருஷ்ணன்

 

10. தளி- பி.ராமச்சந்திரன்

 

11. பென்னாகரம்- கே.பி.கந்தசாமி

 

12. செய்யாறு- பி.பாஸ்கரன்

 

13. செஞ்சி- எம்.எஸ்.ராஜேந்திரன்

 

14. விழுப்புரம்-ஆர். ஜெயக்குமார்

 

15. கெங்கவல்லி-சிவகாமி பரமசிவம்

 

16. சேலம் தெற்கு-அண்ணாதுரை

 

17. திருச்செங்கோடு-நாகராஜன்

 

18. ஈரோடு கிழக்கு-பி.ராஜேஷ்குமார்

 

19. ஈரோடு மேற்கு-என்.பி.பழனிச்சாமி

 

20. காங்கேயம்- உஷாதேவி

 

21. பவானி- சித்திவிநாயகம்

 

22. பவானிசாகர்(தனி)-என்.ஆர்.பழனிச்சாமி

 

23. உதகமண்டலம்-ஜெ.ராமன்

 

24. திருப்பூர் வடக்கு-சின்னச்சாமி

 

25. திருப்பூர் தெற்கு-பாயிண்ட் மணி

 

26. சூலூர்-மோகன் மந்திராசலம்

 

27. கோவை தெற்கு-வானதி சீனிவாசன்

 

28. சிங்காநல்லூர்-சி.ஆர்.நந்தகுமார்

 

29. ஒட்டன்சத்திரம்-எஸ்.கே.பழனிச்சாமி

 

30. கரூர்- கே.சிவசாமி

 

31. திருச்சி கிழக்கு-

 

32. நாகப்பட்டினம்-நேதாஜி

 

33. வேதாரண்யம் -வேதரத்தினம்

 

34. கும்பகோணம் -அண்ணாமலை

 

35. பட்டுக்கோட்டை -கருப்பு முருகானந்தம்

 

36. பேராவூரணி -ஆர்.இளங்கோ

 

37. மானாமதுரை (தனி) -எம்.ராஜேந்திரன்

 

38. மதுரை கிழக்கு -எம்.சுசீந்திரன்

 

39. சோழவந்தான் (தனி) -எஸ்.பழனிவேல்சாமி

 

40. திருமங்கலம் -வி.ஆர்.ராமமூர்த்தி

 

41. போடிநாயக்கனூர் -வி.வெங்கடேசுவரன்

 

42. சாத்தூர் -பி.ஞானபண்டிதன்

 

43. விருதுநகர்- சி.காமாட்சி.

 

44. பரமக்குடி (தனி)-பொன்.பாலகணபதி.

 

45. விளாத்திக்குளம்-பி.ராமமூர்த்தி.

 

46. தூத்துக்குடி-எம்.ஆர்.கனகராஜ்.

 

47. ஒட்டப்பிடாரம் (தனி)-ஏ.சந்தனகுமார்.

 

48. கடையநல்லூர்-கதிர்வேல்

 

49. கன்னியாகுமரி-எம்.மீனாதேவ்.

 

50. நாகர்கோவில்-எம்.ஆர்.காந்தி.

 

51. குளச்சல்- பி.ரமேஷ்.

 

52. பத்மநாபபுரம்-எஸ்.ஷீபா பிரசாத்.

 

53. விளவங்கோடு-சி.தர்மராஜ்.

 

54. கிள்ளியூர்-பொன்.விஜயராகவன்.

 

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜே.பி.நட்டா நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்காக ஏழு, எட்டு பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவற்றை பரிசீலித்து, தமிழிசை போட்டியிடும் தொகுதியை விரைவில் அறிவிப்போம்’ என்றார்

 

தமிழகத்தில் பாரதீய ஜனதாவுடன் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுவதாகவும் அந்த கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

 

கேரள மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. திருவனந்தபுரம் சட்டசபை தொகுதியின் வேட்பாளராக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply