வடகொரியாவின் ராணுவ ரகசியங்களை திருடியதாக அமெரிக்கர் ஒப்புதல்
தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்காக உளவு பார்ப்பதாக, அமெரிக்க குடிமக்களை வடகொரியா அடிக்கடி கைது செய்து வருகிறது. இந்த குற்றச்சாட்டின்கீழ் சமீபத்தில் ஓட்டோ வாம்பையர் என்ற அமெரிக்கருக்கு வடகொரியா 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கியது. இதைப்போல கொரிய வம்சாவளி அமெரிக்கரான கிம் டாங் சுல் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் வடகொரியாவில் கைது செய்யப்பட்டார். இவர் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் தூண்டுதலின் பேரில் மன்னிக்க முடியாத உளவு வேலையில் ஈடுபட்டதாக வடகொரியா குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக வடகொரியா மீது மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கிம் டாங் சுல் தனது குற்றத்தை தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். தென்கொரியாவுடன் இணைந்து வடகொரியாவின் ராணுவம் மற்றும் அரசின் ரகசியங்களை திருடியதாக கூறிய அவர், இதற்காக தனக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
வடகொரிய அரசை கவிழ்ப்பதற்காகவே இந்த செயலில் இறங்கியதாக கூறிய அவர், தனது செயலுக்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். கிம் டாங் சுல், தனது குற்றத்தை கண்ணீருடன் ஒப்புக்கொள்ளும் புகைப்படங்களை வடகொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply