பேரம் பேசிய விவகாரம் வைகோவிற்கு கருணாநிதி நோட்டீஸ்

karunaகூட்டணி அமைப்பது தொடர்பில் தி.மு.க. தலைவர், விஜயகாந்திற்கு 500 கோடி ரூபா கொடுக்க முன்வந்தார் என்று, வைகோ அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு, ‘7 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும்’ என்று தி.மு.க தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயளாளர் வைகோவிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளமை தேர்தல் களத்தின் பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இதேவேளை, பத்திரிகையில் வந்த தகவல்களை கொண்டு, வைக்கோ மீது கருணாநிதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருப்பது தலைக்குனிவான விடயம் என்று தே.மு.தி.க. மகளிர் அணி தலைவி பிரேமலதா நெல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் அறிக்கைப் பொதுக்கூட்டத்தில், கூறியுள்ளார்.

அதன் தொடர்ச்சியில், தே.மு.தி.க.விற்கு 500 கோடி ரூபாவும், 80 ஆசனமும் தருவதாக தி.மு.க. தலைவர் தன் கைபட துண்டுச் சீட்டு கொடுத்தது உண்மையா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”அது அண்ணன் வைகோ கருத்து. அதற்கான பதிலை அவரிடமே கேட்க வேண்டும். ஒவ்வொருவர் கருத்துக்கும் நாங்கள் பதில் சொல்ல முடியாது” என்று பிரேமலதா பதிலுரைத்திருந்தார்.

இருந்தபோதும், இந்தக் கூட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘விஜயகாந்தை, பிரகாஷ் ஜவடேகர் மரியாதை நிமித்தமாக வந்து சந்தித்தார்.

2009ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க. இருந்ததால் அவர் வந்து சந்தித்தார். மக்கள் நல கூட்டணி தலைவர்களும் ஒருமுறை வந்து சந்தித்தார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தி.மு.க.வுடன் அதிகார பூர்வமாக எங்கேயும் பேசவில்லை’. என்று கூறியிருந்தார்.

எவ்வாறான போதும், ஒருவருக்கு ஒருவர் வெளியிடும் மாறுபட்ட கருத்துக்களால், கருணாநிதி, விஜயகாந்திற்கு 500 கோடி கொடுக்க முன்வந்தார் என்ற சர்ச்சை தற்போது பூதாகாரமாகியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply