ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதில் அமெரிக்க முஸ்லீம்களுக்கு முக்கிய பங்குண்டு; அதிபர் ஒபாமா வானொலியில் உரை

obamaஅமெரிக்க அதிபர் வேட்பாளராக குடியரசுக் கட்சி சார்பில் முன்னிலையில் இருக்கும் டொனால்டு டிரம்ப் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்களை சர்ச்சைக்குரிய வகையில் முன்வைத்து வரும் வேளையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்க முஸ்லீம்கள் குறித்து வாராந்திர வானொலி உரையில் பேசியவை பின்வருமாறு:-

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவாக இருக்கப் போகிறவர்கள் அமெரிக்க முஸ்லீம்கள்தான். அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முஸ்லீம்கள் அதிகளவில் பங்காற்றியிருக்கிறார்கள். முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் நுழையவிடாமல் தற்காலிக தடை விதிக்க வேண்டும் என டொனால்டு டிரம்ப் பேசி வருகிறார். இது அமெரிக்காவின் பாரம்பரியம், வரலாற்றுக்கு எதிரானது. அமெரிக்காவில் மதசுதந்திரம் உள்ளதா? என்ற சந்தேகத்தை எழுப்பும் பேச்சு. ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதே அமெரிக்க ராணுவத்தின் முதல் பணி. நாங்கள் அதில் வெல்வோம். தீவிரவாதிகள் தோல்வியை தழுவுவார்கள். எங்களது பாரம்பரியத்தையும், வாழ்க்கை முறையையும் கைவிட வேண்டும் என தீவிரவாதிகள் நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் கைவிட மாட்டோம். பெல்ஜியம் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு. தீவிரவாதத்தை வேரறுக்கும் வரையில் அமெரிக்கா ஓயாது.

இவ்வாறு அதிபர் ஒபாமா உரையாற்றினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply