ஐ.நா-வின் மனித உரிமைகள், தொழில்களுக்கான ஆலோசகராக இந்தியர் நியமனம்

eb860c38-c15a-4a79-afee-7964901638c7_S_secvpfஇந்தியாவை சேர்ந்த சூர்ய தேவ் என்பவரை ஜெனீவாவை மையமாக கொண்டு இயங்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் முக்கிய ஆலோசகராக நியமித்துள்ளது. சூர்ய தேவ் மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கான ஆசியா பசுபிக் பகுதியின் பிரதிந்தியாக செயல்படுவார். சூர்ய தேவ் ஹாங்காங் பல்கலைக் கழக சட்டத் துறையில் பேராசியராக பணி புரிந்து வருகின்றவர். இவர் வணிகங்கள், மனித உரிமைகள், பன்னாட்டு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு, இந்தியா சீனா அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

 

வணிக மற்றும் மனித உரிமைகள் தொடர்பான இந்தியாவின் தேசிய கட்டமைப்பு குறித்து ஆய்வறிக்கையையும் சமர்பித்துள்ளார்.

 

சூர்யா தேவ் நியமனம் தொடர்பான கடிதத்தை மனித உரிமை கவுன்சிலின் தலைவர் சாய் யாங்-லிம் கடிதம் மூலம் அவருக்கு தெரிவித்துள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply