பாரா­ளு­மன்றம் ஏப்ரல் 5 ஆம் திகதி அர­ச­மைப்பு சபை­யாக கூடு­கி­றது

parlimentபாரா­ளு­மன்றம் ஏப்ரல் 5 ஆம் திகதி முதன் முத­லாக அர­ச­மைப்பு சபை­யாகக் கூட­வுள்­ள­தென்றும் அப்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்­ப­தற்­காக இரண்டு குழுக்கள் நிய­மிக்­கப்­ப­டு­மென்று அமைச்­சரும் சபை முதல்­வ­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­துள்ளார்.புதிய அர­சி­ய­மைப்பை தயா­ரிப்­ப­தற்­காக பாரா­ளு­மன்றம் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் அர­ச­மைப்பு சபை­யாக மாறும். அர­ச­மைப்பு சபை நட­வ­டிக்­கை­களில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் அனு­ம­திக்­கப்­ப­டுவர் என்றும் இதில் மறைப்­ப­தற்கு எதுவும் இல்­லை­யென்றும் அவர் தெரி­வித்தார்.

எதிர்க்­கட்­சி­யினர் சபைக்குள் ஒன்று வெளியில் ஒன்­றுமாய் பேசு­கின்­றனர். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கொடுப்­ப­ன­வு­களை அதி­க­ரிப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் நடை­பேற்ற பேச்சு வார்த்­தையின் போது இணக்கம் தெரி­வித்த எதிர்க்­கட்­சி­களின் தலை­வர்கள் வெளியில் வந்து இதை விமர்­சிக்கத் தொடங்­கி­விட்­டனர்.

இந்த மாதி­ரி­யான நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளவே நாம் அரசமைப்பு சபை தொடர்பாக பகிரங்கத் தன்மையுடன் நடந்து கொள்ள விரும்புகின்றோம் என்றும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply