தீவிரவாதத்திற்கு எதிராக அன்பை ஆயுதமாக ஏந்துங்கள்: போப் பிரான்சிஸ்
இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஈஸ்டர் தினமான இன்று வாடிகனில் போப் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டு கிறிஸ்தவ தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பிரசல்ஸ் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பேசிய போப் பிரான்சிஸ், உலகின் பல பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தல்கள், அநியாயங்கள், வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து வருத்தம் தெரிவித்தார்.
குறிப்பாக, ஈராக், ஐவரி கோஸ்ட், கேமரூன், சாட், நைஜீரியா, துருக்கி மற்றும் பெல்ஜியம் ஆகிய பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களை சுட்டிக்காட்டினார். கடவுள் மரணத்தையும், சுயநலத்தையும் அன்பு எனும் ஆயுதங்களை கொண்டு வீழ்த்தினார். அதைபோல தீவிரவாதத்திற்கு எதிராக போராட அன்பை ஆயுதமாக ஏந்த வேண்டும் என்றார்.
ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்ததால் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply