காங்கிரஸ் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியை தோற்கடியுங்கள்: மேற்குவங்காள தேர்தலில் மம்தா பானர்ஜி பிரசாரம்
294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி மே 5-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கேரள மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் இந்த 2 கட்சிகளும் எதிர் எதிராக போட்டியிடுகின்றன. இந்த முரண்பாடுகளை சுட்டிக்காட்டி மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, இது பொருத்தம் இல்லாத கூட்டணி என்று விமர்சித்து உள்ளார்.
புருலியா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒரு பொருத்தம் இல்லாத கூட்டணி. இந்த தேர்தலில் அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காமல் தோற்கடியுங்கள். எந்த கொள்கையும் இல்லாத இந்த கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் பா.ஜனதா கட்சிகள் அரசியல் ரீதியாக என்னுடன் மோத வேண்டும். அதை விட்டுவிட்டு எனது கட்சியின் மீது அவதூறு பரப்பக்கூடாது.
முந்தைய இடதுசாரி ஆட்சியில் மாநிலத்தில் வன்முறை அதிகமாகி, மக்கள் பீதியுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் எங்கள் ஆட்சி வந்த பின்னர் தான் அமைதியும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மம்தாபானர்ஜி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply