பெல்ஜியம் தாக்குதல் – இலங்கை மீன் தடை குறித்த ஆய்வு பிற்போடப்பட்டது

fishஇலங்கை மீன் தயாரிப்புக்களை கொள்வனவு செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பிலான இறுதி ஆய்வு எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ளது.குறித்த ஆய்வு நாளை அல்லது நாளை மறுதினம் பெல்ஜியத்தின் ப்ரசல்ஸ் நகரில் நடத்த , முன்னதாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்திருந்த நிலையில், அண்மையில் பெல்ஜியத்தில் இடம்பெற்ற தாக்குதல் காரணமாக இந்த நடவடிக்கை எதிர்வரும் 6ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சுதெரிவித்துள்ளது.

இந்த நாட்டு மீன் தயாரிப்புகளை கொள்வனவு செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பிலான இறுதி ஆய்வு இதன்போது இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் மீன்பிடி அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழு கலந்து கொள்ளமுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply