இலங்கை வரலாற்றில் அதிகரித்த டொலரின் பெறுமதி

DOLARஇலங்கை வரலாற்றில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 149 ரூபாவைத் தாண்டிச் சென்றுள்ளமை இதுவே முதற்தடவை என தெரிவிக்கப்படுகின்றது.நேற்றைய தினம் ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 149 ரூபாவையும் தாண்டி 150 ரூபாவை எட்டியிருந்ததாக சந்தை நிலவரம் குறிப்பிடுகின்றது.மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணயமாற்று விலையின் படி ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 149.54 சதமாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று முன்தினம் (28) 148.91 சதமாக காணப்பட்டது. இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் அந்நியச் செலாவணி குறைவடைந்துள்ளதனால், அமெரிக்க டொலருக்கான ரூபாயின் பெறுமதி இவ்வாறு குறைந்து செல்வதாக பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply