சீனாவில் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் துணை கவர்னருக்கு 12 ஆண்டு சிறை
சீனாவில் அதிபர் க்சி ஜின்பிங் உத்தரவின்பேரில் முந்தைய ஆட்சிக் காலத்தில் லஞ்ச, ஊழலில் ஈடுபட்டோர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.அவ்வகையில், சீனாவின் தெற்கு மாகாணங்களில் ஒன்றான ஹைனான் மாகாணத்தின் துணை கவர்னராக கடந்த 2014-ம் ஆண்டு பதவிவகித்த ஜி வென்லின் என்பவர் சுமார் 32 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு அரசுப் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சீனாவின் முன்னாள் பாதுகாபுத்துறை மந்திரியின் ஆதரவுடன் இந்த முறைகேட்டில் அவர் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்றுவந்த விசாரணையில் ஜி வென்லின் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply