3500 கிலோ பொட்டாசியம் குளோரைட் பொதிகளுடன் கொள்கலன்கள் மீட்டெடுப்பு
முல்லைத்தீவு, ஒலுமடு பிரதேசத்திலிருந்து பொட்டாசியம் குளோரைட் நிரப்பப்பட்ட கொள்கலன் ஒன்றை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சா ளர் பிரிகேடியர உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். புலிகளால் நிலத்திற்குக் கீழ் புதைத்து வைக்கப்ப ட்டிருந்த இந்த கொள்கலனில் 3500 கிலோ எடையுள்ள பொட்டாசியம் குளோரைட் பொதிகள் மறைத்து வைக்கப்ப ட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஊடகங்களு க்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடை பெற்றது.
இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்,
புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒலுமடு பிரதேசத்தில் நிலைகொண்டு பாரிய தேடுதல் நடவ டிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் இராண்டாவது அதிரடிப் படையினர் இந்த கொள்கலனை மீட்டெடுத்துள்ளனர்.
ஐம்பது கிலோ எடையுள்ள பொட்டாசியம் குளோ ரைட் நிறப்பப்பட்ட 70 பொதிகள் இந்த கொள்கலன் முழுவதிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரி வித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply