யுத்த நிறுத்தத்துக்கு அரசு தயாரில்லை மோதல் தவிர்ப்புகளே சாத்தியம்:கெஹெலிய ரம்புக்வெல்ல
புலிகள் அமைப்புடன் எந்த விதத்திலும் யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் தயார் இல்லை என்றும், பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு அவ்வப்போது மோதல் தவிர்ப்புக்களே மேற் கொள்ளப்பட்டு வருவதாக தேசிய பாது காப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச் சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
யுத்த நிறுத்தம், மோதல் தவிர்ப்பு ஆகிய இரண்டும் வெவ்வேறானவை. இந்தச் சொற்பிரயோகங் களின் வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளாத சில வெளிநாட்டு ஊடகங்கள் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆயுதங்களைக் கீழே வைத்து பாதுகாப்புப் படையினரிடம் சரணடைதல், அல்லது தங்களின் பிடியிலுள்ள பொதுமக்களை விடுவித்தல் ஆகிய இரு மாற்று வழிகள் மாத்திரம் தற்பொழுது புலிகளுக்கு உள்ளது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் தொடர் பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:- புலிக ளைக் காப்பாற்றும் முயற்சியாக உடனடி யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வர சர்வதேச ரீதியில் பல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இராணுவ ரீதியில் புலிகள் 99 சத வீதம் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதனை தற்பொழுது முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தற்பொழுது நாம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளோம்.
புலிகள் ஆயுதங்களை கீழே வைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர் களின் பிடியில் சிக்கி அவதிப்படும் அப்பாவி பொது மக்களை வெளியேற அனுமதித்தாலே போதும். ஆயுதங்களை கீழே வைக்கும் விடயத்தையும், சரணடைய வைப்பதையும் எமது பாதுகாப்பு படையினர் கவனித்துக் கொள்வார்கள்.
புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவது தொடர்பாக தகவல்கள் எமக்குக் கிடைக்கும் பட்சத்தில் படையினர் உடனடியாக அந்தப் பிரதேசத்தில் மேற் கொள்ளும் தாக்குதல் நடவடிக்கையை தற்காலிகமாக தவிர்த்துவிட்டு, வரும் பொது மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
கடந்த சில மாதங்களாக இதுபோன்ற தற்காலிக மோதல் தவிர்ப்புக்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது மக்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்திற் கொண்டு முப்படைகளின் தளபதியான, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 48 மணிநேர மோதல் தவிர்ப்பு ஒன்றை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
நாங்கள் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள் வதன் காரணமாக இதுவரை 62157 பொது மக்கள் புலி களின் பிடியிலிருந்து தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¤லுகல்லே, இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, விமா னப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணய க்கார, கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ண, பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply