சிரிய அகதிகளை போர்ப்பகுதிக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பும் துருக்கி: பொது மன்னிப்பு சபை அதிர்ச்சி தகவல்
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் காரணமாக பலர் உயிருக்குப் பயந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர். இதேபோல் ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்தும் செல்கின்றனர். இவர்கள், துருக்கி மற்றும் கிரீஸ் தீவுகளுக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.எனவே, அகதிகளை கட்டுப்படுத்த துருக்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, சட்டவிரோதமாக கிரீஸ் தீவுகளுக்கு வரும் அகதிகளை துருக்கிக்கு அனுப்பி, அங்கிருந்து அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சிரிய அதிகளை துருக்கி அரசாங்கம் கட்டாயப்படுத்தி அனுப்பி வருவதாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை கூறியுள்ளது. துருக்கி-சிரிய எல்லையில் நடத்திய ஆய்வில், துருக்கியில் இருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான சிரிய அகதிகள் வெளியேற்றப்படுவது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் துருக்கி-ஐரோப்பிய யூனியன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் அபாயகரமான குறைபாடுகள் இருப்பதை இந்த நடைமுறை வெளிப்படுத்துவதாகவும் பொதுமன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply