தமிழர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் சிங்களர்கள் சந்தோஷமாக வாழ முடியும்: இலங்கை அதிபர் சிறிசேனா பேச்சு
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள எரவூர் என்ற இடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேனா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும், ஒற்றுமையுடன் வாழ்வதை பெரும்பான்மை சமூகத்தினர் உறுதி செய்யவேண்டும். ஏனென்றால் இவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் சிங்களர்கள் சந்தோஷமாக வாழ முடியும். இலங்கையில் வாழும் அனைத்து சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எனது அரசு தீர்த்து வைக்கும். வடக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாததால்தான் அங்கு மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
எனவே பிராந்திய வேறுபாடுகள் இன்றி இந்த நாடு வளர்ச்சி காணவேண்டும். அது தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு என எந்த மாகாணம் என்றாலும் சரி, கல்வி சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற வசதிகள் அனைவருக்கும் சரி சமமாக கிடைக்கவேண்டும்.
மக்கள் ஒருபோதும் கைகளில் ஆயுதங்களை எடுப்பதற்கு மீண்டும் அனுமதிக்க மாட்டோம்.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை களைந்து அவர்கள் அரசியல் சுதந்திரம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் புதிய அரசியல் சாசனத்திற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply