நேட்டோ, சவுதி அரேபியாவின் பக்கம் தாக்குதலை திசை திருப்பிய டொனால்ட் டிரம்ப்

diramஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்.ஜப்பானும், கொரியாவும் தங்களது அணு ஆயுத உற்பத்தியை பெருக்கிக் கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும் என சமீபத்தில் குறிப்பிட்ட டிரம்ப், சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை தேடிக் கொண்டார்.

தற்போது, வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள 28 நாடுகளை சேர்ந்த அமைப்பான ‘நேட்டோ’ மீது சீறிப்பாய்ந்துள்ள டிரம்ப், இந்த அமைப்பே ’வீண்’ என்று குறிப்பிட்டுள்ளார். விஸ்கான்சின் மாநிலத்தில் ஆதரவு திரட்டிய அவர், முன்னர் செய்த குறைபாடுகளுக்கு அவர்கள் (நேட்டோ அமைப்பில் அமைந்துள்ள நாடுகள்) வருந்த வேண்டும், இல்லாவிட்டால் நேட்டோ அமைப்பையே கலைத்துவிட வேண்டும் என கூறினார்.

இதேபோல், சவுதி அரேபியாவின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம், நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பதால் சவுதியிடம் யாரும் வாலாட்டுவதில்லை. ஆனால், இதற்கு நியாயமான கைமாறாக சவுதி நமக்கு ஒன்றுமே செய்வதில்லை. அவர்களுக்கு உதவிசெய்து, உதவிசெய்து நம்முடைய சட்டைதான் தளர்ந்துப் போகிறது (நாம் இளைத்துப் போகிறோம்) என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply